உதகை-குன்னூர் மலை ரயில் நேரம் மாற்றம்

நீலகிரி மாவட்டம்,  உதகை-குன்னூர் வரை செல்லும் மலை ரயிலின் நேரம் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் மாற்றப்படவுள்ளது.

நீலகிரி மாவட்டம்,  உதகை-குன்னூர் வரை செல்லும் மலை ரயிலின் நேரம் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
குன்னூரில் இருந்து உதகை வரை செல்லும் ரயில் மாலை 4.30-க்குப் புறப்படுவதற்குப் பதிலாக செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் மாலை  4 மணிக்குப் புறப்பட்டு  வெலிங்டன் ரயில் நிலையத்தை 4.08-க்கும்,  அருவங்காடு ரயில் நிலையத்தை 4.18-க்கும்,  கேத்தி ரயில் நிலையத்தை 4.34-க்கும்,  லவ்டேல் ரயில் நிலையத்தை 4.50-க்கும், உதகை ரயில் நிலையத்தை 5.15-க்கும் வந்தடையும்.
உதகையில் இருந்து குன்னூருக்கு வழக்கமாக மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயில்  செப்டம்பர் 4-ஆம் தேதி மாலை முதல் உதகையிலிருந்து 5.30-க்குப் புறப்பட்டு லவ்டேல் ரயில் நிலையத்தை 5.41-க்கும் , கேத்தி ரயில் நிலையத்தை 5.53-க்கும், அருவங்காடு ரயில் நிலையத்தை 6.07-க்கும், வெலிங்டன் ரயில் நிலையத்தை 6.15-க்கும்,  குன்னூர் ரயில் நிலையத்தை  6.40-க்கும்  சென்றடையும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com