நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை உரிமங்களுக்கு 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை  உரிமங்களுக்காக செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை  உரிமங்களுக்காக செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தீபாவளி பண்டிகையையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய தாற்காலிகப் பட்டாசு உரிமங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பட்டாசு விற்பனைக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தின் வரைபடம்,  இடத்தின் உரிமை குறித்த ஆவணம்,  சொந்தக் கட்டடம் எனில்  ஊராட்சி அல்லது நகராட்சிக்கு அண்மையில் செலுத்திய வீட்டு வரிக்கான ரசீது,  வாடகை கட்டடம் எனில் கட்டட  உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன், உரிய தலைப்பின்கீழ் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் 13-ஆம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  
இந்த அறிவிப்பு கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனைதாரர்களுக்கும் பொருந்தும்.  உரிமம் இன்றி பட்டாசுப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது வெடி பொருள்கள் சட்டப்படி உரிய குற்ற நடவடிக்கைகள் தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com