மலைத் தோட்டப் பயிர் மேலாண்மைப் பயிற்சி

கோத்தகிரி, சுள்ளிகூடு கிராமத்தில் விவசாயிகளுக்கு "ஆத்மா' திட்டத்தின்கீழ் காய்கறிகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கோத்தகிரி, சுள்ளிகூடு கிராமத்தில் விவசாயிகளுக்கு "ஆத்மா' திட்டத்தின்கீழ் காய்கறிகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
சுள்ளிகூடு ஊர்த் தலைவர் தருமன் தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ஆனந்த், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். மேலும், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிப் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் குறித்தும், அதைத் தடுக்க பூச்சி மருந்து தெளிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில், சுள்ளிகூடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை "ஆத்மா' திட்ட அலுவலர் தீபா, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர்கள் பிரசாந்த், ராகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com