ஈளாடா தடுப்பணையில் குடிநீர் விநியோகம் தொடக்கம்

கோத்தகிரி நகருக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் விநியோகம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.    

கோத்தகிரி நகருக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் விநியோகம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.    
கோத்தகிரி நகருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈளாடா தடுப்பணையில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆரம்பத்தில், மக்கள்தொகை குறைவாக இருந்ததால் நிறைவான தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. நாளடைவில், மக்கள் தொகையுடன், குடியிருப்புகள், காட்டேஜ்கள் அதிகரித்துவிட்டதால் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
நகர மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக கொண்டு வரப்பட்ட அளக்கரை மெகா குடிநீர்த் திட்டப் பணிகள் சில வாரங்களில் முடியும் தருவாயில் உள்ளதால் அதுவரை, ஈளாடா தடுப்பணையைத் தூர்வாரி அங்கு சேகரமாகும் தண்ணீரை விநியோகிக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்த நிலையில், எச்.ஏ.டி.பி., திட்டத்தில் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில், 80 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் அணை தூர்வாரப்பட்டுள்ளது. மீதியுள்ள 20 லட்சம் ரூபாய் செலவில் மண்ணரிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அணையில் மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதுவரை, இந்தத் தண்ணீர் நகர மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கோத்தகிரி நகரில் உள்ள நீர் ஆதாரங்கள் மூலமாகவும், லாரிகள் மூலமும் கொண்டு வந்தும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், அணையில் தற்போது போதியளவு தண்ணீர் இருப்பதால் நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com