எம்ஜிஆர் நூற்றாண்டு விழாபந்தல்கால் நடும் நிகழ்வில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக உதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக உதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தமிழக அரசின் விழாவாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 10, 11-ஆம் தேதிகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ள உதகை குதிரைப் பந்தய மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ், நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், உதகை கோட்டாட்சியர் கீதாபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் இரண்டு நாள்களுக்கு நடத்தப்படுகின்றன. இதில், செப்டம்பர் 10-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சிகள் பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன. பிரபல மனோதத்துவ நிபுணர் காமராஜ் தலைமையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும். இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 19,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார் என்றார்.
முன்னதாக உதகை தமிழகம் மாளிகையில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப்பட வேண்டிய நலத் திட்டங்கள் குறித்தும், தற்போது நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் குறித்தும், விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com