விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

கூடலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயக விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயக விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டன.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் உதகை-மைசூர் சாலை, பழைய கோர்ட் சாலை வழியாகச் சென்று இரும்புப் பாலத்தில் உள்ள பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பந்தலூர் தாலூகாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பொன்னாணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், இண்டியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 85 விநாயகர் சிலைகள் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. மைதானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஈரோடு மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தொடக்கி வைத்தார். சத்தியமங்கலம்-மைசூர் சாலை, கடைவீதி வழியாக பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
பெருந்துறை பகுதியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி சார்பில் பெருந்துறை பகுதியில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
முன்னதாக, ஊர்வலத்துக்கு இந்து முன்னணி பெருந்துறை ஒன்றியத் தலைவர் ப.முத்துசாமி தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ். தேவராஜ் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
உதகையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 125 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் உதகையில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்ததால் சில இடங்களில் காவல் துறையினருக்கும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோத்தகிரி பகுதியில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா ஆகியவற்றின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிலட்டி அருவியில் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.
குன்னூர், கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்னூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டன.
பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு லால்ஸ் அருவியில் கரைக்கப்பட்டன. கோத்தகிரி டானிங்டன் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் ஜான்ஸ் சதுக்கம் வழியாக கொண்டு செல்லப்பட்டு உயிலட்டி அருவியில் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com