வயநாடு மருத்துவக் கல்லூரியில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு அனுமதி

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கேரள மாநிலம்,  வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கேரள மாநிலம்,  வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
கூடலூர் அருகே உள்ள கேரள மாநிலம்,  வயநாடு மாவட்டத்திலுள்ள விம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடலூர் பகுதி மக்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உயர் சிகிச்சை பெற 5 மணி நேரம் பயணித்து  கோவை செல்ல வேண்டிய நிலை  உள்ளது.
தற்போது, வயநாடு மாவட்டம்,  அறப்பட்டாவிலுள்ள விம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஒரு மணி நேரத்தில் உரிய சிகிச்சை பெறமுடியும்.
காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற வருபவர்கள் காப்பீட்டு அட்டையைக்  கொண்டு வர வேண்டும் அல்லது காப்பீட்டு எண்ணைத் தர வேண்டும். இத்திட்டத்தின்கீழ் வரும் பயனாளிகளுக்கு வழிகாட்ட மருத்துவமனையில் தமிழக அரசால் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதித்துள்ள அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என அந்த மருத்துவமனையின் முதுநிலை மேலாளர்கள் சூப்பி கல்லங்கோடன், பிஜு ஜி.மேத்யூ, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோபின் ஜேம்ஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com