மஞ்சூர்-கோவை சாலையில்  நடமாடிய யானைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம்,  மஞ்சூர்-கோவை சாலையில் முள்ளி சோதனைச் சாவடி  அருகே வியாழக்கிழமை இரவு நடமாடிய யானைக் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம்,  மஞ்சூர்-கோவை சாலையில் முள்ளி சோதனைச் சாவடி  அருகே வியாழக்கிழமை இரவு நடமாடிய யானைக் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூரிலிருந்து கெத்தை,  முள்ளி,  வெள்ளியங்காடு வழித்தடம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு வரும் மற்றொரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது. 
இந்நிலையில்,  மஞ்சூர்-கோவை சாலையில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 3 குழுக்களாகப் பிரிந்து கெத்தை,  வெள்ளியங்காடு,  முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக நடமாடி வருகின்றன. 
இந்நிலையில்,  முள்ளி சோதனைச் சாவடி அருகே  குட்டியுடன்  4 யானைகள் வியாழக்கிழமை இரவு சுற்றித் திரிந்தன. சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக சோதனைச் சாவடி  அருகிலேயே யானைகள்  
முகாமிட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவை அடர்ந்த வனப் பகுதிக்கு சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com