செட்டில்மெண்ட் பகுதிக்குள் நுழைந்து வீட்டைச் சேதப்படுத்திய யானை

செட்டில்மெண்ட் பகுதிக்குள் நுழைந்த யானை அப்பகுதியில் வசிக்கும் பழுங்குடியின மக்களைத் துரத்தியதுடன், வீடு ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது.

செட்டில்மெண்ட் பகுதிக்குள் நுழைந்த யானை அப்பகுதியில் வசிக்கும் பழுங்குடியின மக்களைத் துரத்தியதுடன், வீடு ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது.
வால்பாறையை அடுத்த காடம்பாறை பகுதியில் அமைந்துள்ளது ஈத்துக்குழி செட்டில்மெண்ட். இப்பகுயில் 20-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவ்வப்போது அருகில் உள்ள வனத்தில் இருந்து யானைகள் செட்டில்மெண்ட பகுதிக்கு வருவது வழக்கம். அங்கு வசிக்கும் மக்கள் யானைகள் வந்தால் சப்தம் எழுப்பி விரட்டி வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த யானை அங்குள்ள வீடு ஒன்றைச் சேதப்படுத்தியது. பின்னர், அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட பழங்குடியின மக்களையும் யானை விரட்டியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் தீப்பந்தங்களைக் கொண்டு யானையை விரட்டியுள்ளனர். வனத் துறையினர் சனிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com