அனுபோக சான்று பெற நீலகிரியில் சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் அனுபோக சான்று பெறுவதற்காக வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அனுபோக சான்று பெறுவதற்காக வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக நில அனுபோக சான்று பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் அனுபோக சான்று வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
இதில், உதகை வட்டத்தில் 572 மனுக்கள் வரப்பெற்று அனைவருக்கும் சான்று வழங்கப்பட்டது. குந்தா வட்டத்தில் 450 மனுக்கள் பெறப்பட்டு அதில் 250 மனுக்களுக்குச் சான்று வழங்கப்பட்டது. பந்தலூரில் 133 மனுக்கள் பெறப்பட்டு 126 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டதோடு 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல, கூடலூர் வட்டத்தில் வரப்பெற்ற 13 மனுக்களுக்கும் சான்று வழங்கப்பட்டது. குன்னூர் வட்டத்தில் 232 மனுக்கள் பெறப்பட்டு 206 மனுக்களுக்கு சான்று வழங்கப்பட்டதோடு 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கோத்தகிரி வட்டத்தில் 584 மனுக்கள் பெறப்பட்டு 379 மனுக்களுக்குச் சான்று வழங்கப்பட்டு 205 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
மொத்தத்தில் மாவட்டத்தில் 1,984 மனுக்கள் பெறப்பட்டு 1,454 பேருக்கு உடனடியாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 450 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும். இம்முகாம்களில் கலந்துகொள்ள முடியாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் உரிய வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com