குன்னூரில் தேயிலை லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

குன்னூரில் தேயிலை பாரம் எற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குன்னூரில் தேயிலை பாரம் எற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூரில் உள்ள தேயிலைக் கிடங்குகளில் சில மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தேயிலை பாரம் ஏற்றி வரும் லாரிகளை குன்னூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நிறுத்தி, தேயிலை மூட்டைகளை ஏற்றுவதால் கால விரயம் ஏற்படுகிறது.
இதனால், லாரிகளை இயக்குவதில் ஒரு நாள் கூடுதலாகிறது. ஒரு முறை பாரம் ஏற்றச் சென்றால் ரூ. 500 பேட்டாவும், தார்பாய்களை மாற்றுவதற்கு ரூ. 200-ம் டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் தற்போது வழங்கி வருகிறது. இதை ஒவ்வொரு முறையும் தார்பாயைக் கழற்றி மாற்றும் போதும் ரூ. 200 வழங்குவதுடன், ஒரு நாள் கூடுதலாக தங்கினால் அதற்கு ரூ. 500 கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் காரணமாக மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 30 லாரிகளில் செல்ல வேண்டிய 3 லட்சம் கிலோ தேயிலைத் தூள் கிடங்குகளில் தேங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ. 3 கோடி ஆகும்.
இதுகுறித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: கோரிக்கைகள் குறித்து எந்தவிதப் பேச்சுவார்தைக்கும் அழைப்பு விடுக்காமல் ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூலி உயர்வு மற்றும் பேட்டா பணத்தை டிரான்ஸ்போர்ட் ஏஜென்சிகள் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவாக வில்லை என்றனர்.
தேயிலை பாரம் ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் இதுபோன்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தேயிலைத் தொழில் வெகுவாக பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னைக்கு உடனடியாக சுமுக முடிவு காண வேண்டும் என்று தேயிலை வர்த்தகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com