இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 17th July 2017 08:11 AM | அ+அ அ- |
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கூடலூரில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூர் பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் மாலாமணி, சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாஜக பிரசார அணி நிர்வாகி பி.ஏ.சாமி, சோமு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.