பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published on : 17th July 2017 08:13 AM | அ+அ அ- |
ஓவேலி பேரூராட்சியில் உள்ள காந்தி நகர் பகுதிக்கு மீண்டும் பேருந்து சேவையை துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர் கிராமத்துக்கு கடந்த 40 ஆண்டுகளாக கூடலூர் பணிமனையிலிருந்து அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம், இப்பகுதிக்கான பேருந்து சேவையை திடீரென நிறுத்தியுள்ளது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், தனியார் வாகனங்களில் அதிகக் கட்டணம் கொடுத்து பயணிக்கவேண்டி நிலையில் உள்ளனர்.
எனவே, நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை உடனடியாக இயக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.