குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம் உதகையில் தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம் உதகையில் தொடங்கியது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, சமூக நலத் துறை, சத்துணவு திட்டத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை ஆகியன இணைந்து 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றன.
இதில் உதகையில் நடைபெற்ற முதற்கட்ட விழிப்புணர்வு முகாமை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கிவைத்தார்.
இந்த முதற்கட்ட முகாம் ஜூன் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது கட்ட முகாம் ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் ஓஆர்எஸ் பொட்டலம் தயாரிப்பது குறித்தும், கை கழுவும் முறை குறித்தும் விவரிக்கப்படும். அத்துடன் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து சத்துணவின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்படவுள்ளது.
இந்த முகாம்களின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 43,652 குழந்தைகள் பயனடைவர் என ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com