குன்னூர் ராணுவ வீரர்கள் குடியிருப்பில் தேனீக்கள் கொட்டியதால் வீரர்கள், தீயணைப்புப் படையினர் காயம்

நீலகிரி மாவட்டம், குன்னுர் ராணுவ வீரர்கள் குடியிருப்புப் பகுதியில் திடீரென தேனீக்கள் கொட்டியதால் ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், ஒப்பந்த ஊழியர்கள் என பலரும் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு

நீலகிரி மாவட்டம், குன்னுர் ராணுவ வீரர்கள் குடியிருப்புப் பகுதியில் திடீரென தேனீக்கள் கொட்டியதால் ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், ஒப்பந்த ஊழியர்கள் என பலரும் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் ராணுவ முகாமில், ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, தண்ணீர்த் தொட்டியின் பின்புறப் பகுதியில் இருந்த தேன்கூடு கலைந்ததால் தேனீக்கள் படையெடுத்து, அங்கிருந்த ராணுவ வீரர்களைக் கொட்டின. உடனே அவர்கள் தண்ணீர்த் தொட்டிக்குள் குதித்தனர்.
இது குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள், தேனீக்கள் தாக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றித் திரிந்த தேனீக்கள் மீண்டும் அங்கிருந்தவர்களையும், தீயணைப்புப் படையினரையும் கொட்டின.
இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, ராமசந்திரன், சேகர், கண்ணன், ஞானசேகரன், ஒப்பந்த ஊழியர்களான ராஜேந்திரன், சிவா, ஜேவியர், சில ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்த ராணுவ வீரர்கள் பலரும் போர்வைகளை அணிந்துகொண்டு ஓடித் தப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com