தேயிலைத் தோட்டத்தில் உலவிய சிறுத்தை: தொழிலாளர்கள் தப்பியோடினர்

மஞ்சூர் அருகே தாய்சோலையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதால் தோட்டத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அலறியடித்து தப்பியோடினர்.

மஞ்சூர் அருகே தாய்சோலையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதால் தோட்டத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அலறியடித்து தப்பியோடினர்.
  மஞ்சூர் அருகே தாய்சோலை, தொட்டக்கம்பை, கோவிலட்டி, கேரிங்டன், தனமந்தோரை, மேல்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், விளைநிலங்கள் அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. வனப் பகுதிகளில் உள்ள கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீரைத் தேடி விளைநிலங்கள்,
தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவ்வப்போது புகுந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
 இந்நிலையில், தாய்சோலையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டப் பகுதிக்குள் சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை புகுந்தது. இதைப் பார்த்த தோட்டத் தொழிலாளர்கள், அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர். சிறுத்தை அதே பகுதியில் அரை மணி நேரம் நடமாடிய நிலையில், அதை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுத்தை அப்பகுதியில் இருந்து வனப் பகுதிக்குள் சென்றது.
 தேயிலைத் தோட்டத்துக்குள் உலவும் சிறுத்தையால் தொழிலாளர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் முன்பாக, அதைக் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள்விட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com