மகப்பேறு மருத்துவரை நியமிக்கக் கோரிக்கை

மஞ்சூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஞ்சூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 இது குறித்து நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 மஞ்சூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்கள் ஆன நிலையிலும் அறுவை சிகிச்சை அறை, பிரேதப் பரிசோதனை அறை, ஐ.சி.யூ. பிரிவு, உள்நோயாளிகளுக்கான உணவு வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. உடனடியாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவர், ரேடியாலஜிஸ்ட் ஆய்வாளரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
 வன விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுக்க விளைநிலங்களைச் சுற்றிலும் சூரிய மின்சக்தி வேலி அமைக்க 100 சதவீதம் மானியம வழங்க வேண்டும். யானைகள் நடமாட்டத்தைத் தடுக்க வனத்தில் தேவையான இடங்களில் அகழிகள் அமைக்க வேண்டும். நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான தாய்சோலை, கிண்ணக்கொரை, இரியசீகை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
அந்தந்த பகுதிகளுக்கே மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரலில் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி தர்னாவில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com