தமிழகத்தில் ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திமுக துடிப்பதாக, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திமுக துடிப்பதாக, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
 உதகையில் நகர கூட்டுறவு வங்கி, நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத அரசாகவே இருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தேயிலை விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. எனவே, நீலகிரி தேயிலை விவசாயிகளின் பிரச்னைக்கே தீர்வு காண முடியாத திமுக, தமிழகத்தின் பிரச்னைகளை தங்களால்தான் தீர்க்க முடியும் எனக் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிக்கிறது. அதிமுக அரசு தனது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும்.
 தமிழகத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்காக 37 நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 11 கடைகள் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்களும் இருப்பில் உள்ளன.
 தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நியாயவிலைக் கடைகளில் தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 456,123 மெட்ரிக் டன் தேயிலைத் தூள் விற்பனை செய்யய்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 541 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com