கெட்டுப்போகும் ஆவின் பால்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

கோத்தகிரியில் விநியோகிக்கப்படும் ஆவின் பால் கடந்த  2 நாள்களாக தொடர்ந்து கெட்டுப் போவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோத்தகிரியில் விநியோகிக்கப்படும் ஆவின் பால் கடந்த  2 நாள்களாக தொடர்ந்து கெட்டுப் போவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில் டானிங்டன், பேருந்து நிலையம், காமராஜர் சதுக்கம், ராம்சந்த், அரவேணு உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலமாக பால், தயிர், நெய் உள்ளிட்டப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாள்களாக கோத்தகிரி பகுதியில் விற்பனை செய்யப்படும் ஆவின் பால் கெட்டுப் போய்விடுவதாகப் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆவின் விற்பனையாளர்கள் கூறியதாவது:
வாடிக்கையாளர்களின் புகார் குறித்து ஆவின் பொது மேலாளரிடம் தெரிவித்தோம். பால் குளிரூட்டும் இயந்திரம் பழுதடைந்ததால் பால் கெட்டுப்போவதாகவும், தற்போது இயந்திரம் சீரமைக்கப்பட்டதையடுத்து இனி பால் கெட்டுப்போகாது எனவும் தெரிவித்துள்ளனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com