குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை ஆரம்பம்

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 இங்குள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருபாலரும் படிப்பதற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. 14 வயது பூர்த்தி அடைந்த இருபாலரும் www.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் 31.05.2017 வரை விண்ணப்பிக்கலாம்.
  ஆண்களுக்கான உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், கடைசலர்,  கம்மியர் குளிர்பதனம், கம்மியர் மேட்டார் வைண்டிங், மின்சாரப் பணியாளர் கம்மியர்  (மின்னணுவியல்) மற்றும் உணவுத் தயாரிப்பாளர் பொது, ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் தச்சர், மற்றும்  பட்டறை வைப்பவர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
 உரிய மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம் ரூ.500  உதவித் தொகை, கட்டணமில்லா இருவழி பேருந்து பயணச் சலுகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடபுத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, மற்றும் காலணி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் வளாக நேர்காணல் நடை பெற்று அதன் மூலம் பயிற்சி முடிந்த மாணவ, மாணவியர் பணியமர்த்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் த.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com