ராணுவ வீரர்களின் பழமையை பறைசாற்றும் அணிவகுப்பு

குன்னூர், வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ வீரர்களின் பழமையை பறைசாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்னூர், வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ வீரர்களின் பழமையை பறைசாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது
 நீலகிரி மாவட்டம், குன்னூரில், வெலிங்டன் ராணுவ மையம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எல்லையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைப்பது வழக்கம்.
 இந்நிலையில், 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டமான 1750-ஆவது ஆண்டு முதல்  இன்று வரை வெவ்வேறு காலக்கட்டத்தில் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் மாற்றத்துடன் கூடிய அணிவகுப்புகள் நடைபெற்றது.
 இந்த பழமை வாய்ந்த ராணுவ அணிவகுப்பு நாகேஷ் சதுக்கம், பிளாக் பிரிட்ஜ், சப்ளை டிப்போ, ராணுவ மருத்துவமனை, போர் நினைவுத் தூண் வழியாக குதிரைப் படை ஊர்வலத்துடன் நடைபெற்றது.
 இந்த ஊர்வலத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள், வயது முதிர்ந்த ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com