கோத்தகிரியில் தொடர் மழையால் சேற்றில் சிக்கிய சிற்றுந்து

கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை சிற்றுந்து (மினி பஸ்) ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது. பள்ளத்தில் கவிழாமல் சிற்றுந்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் தப்பினர்.

கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை சிற்றுந்து (மினி பஸ்) ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது. பள்ளத்தில் கவிழாமல் சிற்றுந்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் தப்பினர்.
கோத்தகிரியிலிருந்து கம்பட்டி கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கப்படுகிறது. இந்த சிற்றுந்து ஜக்கலோடை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில்  தேங்கியிருந்த சேற்றில் சிக்கி சாலையோரம் சாய்ந்தது.    ஜக்கலோடை பகுதியில் தனியார் விடுதி கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கு பள்ளம் தோண்டி மண் எடுக்கப்படுகிறது.
தொடர்ந்து 3 நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக மழைநீரில் அடித்து வந்த மண் குவியல்கள் சாலையில் குவிந்ததால் சேறும் சகதியுமாக இருந்தது.  சிற்றுந்து சேற்றில் சிக்கினாலும்,  அதிர்ஷ்டவசமாக  பள்ளத்தில் கவிழாமல் தப்பியது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் சிற்றுந்து மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com