பனியில் இருந்து தேயிலைச் செடிகளைக் காப்பாற்ற விவசாயிகளுக்கு அறிவுரை

தேயிலைச் செடிகளை பனியில் இருந்து காப்பாற்ற விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடிகளை பனியில் இருந்து காப்பாற்ற விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து குந்தா தேயிலை வாரிய துணை இயக்குநர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கை:
பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனியின் பாதிப்பு தென்படும். தேயிலைச் செடிகளையும் பனியின் தாக்குதல் விட்டு வைப்பதில்லை. எனவே, சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் தேயிலைத் தோட்டங்களில் துளிர்விடும் அரும்புகளைப்
 பனியின் தாக்குதல் ஆரம்பிக்கும் முன்னரே எடுக்கத் தொடங்கி விட்டனர்.
இருப்பினும், தொடர்ந்து 2 மாதங்கள் பனியின் தாக்குதல் இருப்பதால் சிறு விவசாயிகள் தங்களது தேயிலைச் செடிகளைப்  பனியின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற அதிகாலை அல்லது மாலை வேளைளில் செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். இதனால், இளம் தளிர்கள் காப்பாற்றப்படுகின்றன. கொழுந்துகள் எடுக்கும்போது, தாய் இலையை தேயிலைச் செடிகளில் வைத்து விட்டு எடுக்க வேண்டும். டிஏபி (டை அம்மோனியம் பாஸ்பேட்) உரத்தைக் கலந்து இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.
புதிதாக நடவு செய்த தேயிலைத் தோட்டங்களில், நாற்றுகளைச் சுற்றிலும் கோத்தகிரி மலர் கொண்டு போர்வை அமைத்தல் மூலம் பனியின் தாக்குதலில் இருந்து தேயிலைச் செடிகளைப் பாதுகாக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com