குன்னூர், கோத்தகிரியில் 8 பேருக்கு டெங்கு அறிகுறி

குன்னூர், கோத்தகிரியில் கடந்த 3 நாள்களில் 8 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

குன்னூர், கோத்தகிரியில் கடந்த 3 நாள்களில் 8 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
கோத்தகிரி அரசு  மருத்துவமனையில் கோத்தகிரியைச் சேர்ந்த சாந்தி (51), கார்த்திக் (11), குன்னூர் அரசு மருத்துவமனையில், பக்காசுரன்மலையை சேர்ந்த பவித்ரன் (17), பெள்ளட்டிமட்டத்தைச் சேர்ந்த சுபத்திரா (47) ஆகியோர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, டென்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (37), உதகை டயாசிஸ்சை சேர்ந்த பாதிரியார் பெரியநாயகம் (54), எஸ்.எம். நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் (41), சமயபுரம் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சதாம் (26) ஆகியோருக்கு டெங்கு  அறிகுறிகள் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனையில் கொசு வலையுடன் கூடிய  தனிப் பிரிவு   ஏற்படுத்தப்பட்டுள்ளது.    
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காலநிலைக்கு டெங்கு கொசுக்கள் இருக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், சமவெளியில் இருந்து திரும்பிய பெரும்பாலானோருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து,  சுகாதாரத் துறை இணை இயக்குநர்  ரகு பாபு கூறியதாவது:
மர்மக் காய்ச்சல் குறித்து ரத்த மாதிரிகள்  எடுக்கப்பட்டு அவற்றை மாவட்ட பரிசோதனைக் கூடத்தில் சோதித்து  என்ன நோய் என்று கண்டறிய 12  முதல் 24 மணி நேரம் வரை ஆகும். எனவே, டெங்கு அறிகுறிகள் இருந்தாலே அவர்களை கோவை  அரசு மருத்துவமனைக்கு  பரிந்துரைத்து வருகிறோம். உதகை, குன்னூர், கூடலூர்,கோத்தகிரியில் இருந்த 3 முதல் 5 மணி நேர பயணத்துக்குப் பின் கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்வது சிரமமாக இருப்பதால் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு குறித்து அறியும் உபகரணங்களை போதுமான அளவு அரசு வழங்க வேண்டும். கூடுதலாக ஆம்புலன்ஸ் வசிதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com