குன்னூரில் நாய்கள் கண்காட்சி:  வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பங்கேற்பு

குன்னூரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தென் மாநில அளவில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பங்கேற்றன.

குன்னூரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தென் மாநில அளவில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பங்கேற்றன.
நீலகிரி கெனல் கிளப் சார்பில் வெலிங்டன்  கன்டோண்மென்ட்  மைதானத்தில் நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை  துவங்கியது. இதில்,  காவல்துறை,  ராணுவம், ரயில்வே துறைகளில் குற்றங்களைக்  கண்டறிய  பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பங்கேற்றன.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கண்காட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் டாபர்மேன்,  கிரேடேன்,  ஜெர்மன்ஷெப்பர்டு,  லேபர் டாக் உள்ளிட்ட உயர்தர நாய்கள் பங்கேற்றன.  இவை  கட்டளைகளுக்கு கீழ்படிதல்,  மோப்பத் திறன்,  நாய்களின் ரகம்  உள்ளிட்ட பிரிவுகளின்  கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த நாய்களுக்கு கெனல்கிளப்பை சேர்ந்த அஞ்சலி,  பெங்களூரைச் சேர்ந்த திருவடி ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com