பெள்ளத்திக்கம்பை பழங்குடியின மக்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கிய போலீஸார்

மஞ்சூர் அருகே பெள்ளத்திக்கம்பை பழங்குடியின கிராம மக்களுக்கு காவல் துறை சார்பில் புத்தாடை, இனிப்பு ஆகியவற்றை ஞாயிற்றுகிழமை  வழங்கப்பட்டது.

மஞ்சூர் அருகே பெள்ளத்திக்கம்பை பழங்குடியின கிராம மக்களுக்கு காவல் துறை சார்பில் புத்தாடை, இனிப்பு ஆகியவற்றை ஞாயிற்றுகிழமை  வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட  வனப்பகுதியையொட்டி தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதி  உள்ளது.  இங்கு இருளர்,  குறும்பர்,  பனியர், காட்டுநாயக்கர்,  தொதவர்,  கோத்தர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுவருலலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சாபில் பழங்குடியின மக்களுக்கு  அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட  பல்வேறு வகையிலான உதவிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா,  நெடுகல்கம்பை, மூப்பர்காடு,  பெள்ளத்திக்கம்பை,  தும்பனேரிகம்பை,  தனியகண்டி,  ஜேஜே நகர் ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நிலவேம்புக் குடிநீர் போலீஸார் சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை,  இனிப்புகள் வழங்கப்பட்டன.
முன்னதாக போலீஸாரை வரவேற்கும் வகையில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ் (குன்னூர்),  திருமேனி (உதகை), ஆய்வாளர்கள் ராஜ்குமார் (மஞ்சூர்),  கணகேசன் (கொலக்கம்பை),  வனத் துறையினர் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெள்ளத்திக்கம்பை,  தும்பனேரிகொம்பை பழங்குடியின  கிராமங்களில் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதை உடனடியாக சீரமைத்து  தர வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து,  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்படைந்த வீடுகளை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com