முட்டைகோஸ் விளைச்சலில் விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் முட்டைகோஸ் விளைச்சலில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் முட்டைகோஸ் விளைச்சலில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கோத்தகிரி வட்டத்தைப் பொருத்தமட்டில் நெடுகுளா, மிளிதேன், வ.உ.சி. நகர், சுள்ளிகூடு, கூக்கல்தொரை, கட்டபெட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக பரப்பளவில் மலைக் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
நடப்பு ஆண்டு முட்டைகோஸ் பயிரை கணிசமான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு பாதுகாத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முட்டைகோஸ் மகசூல் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 15-க்கு விலைபோனது. இந்த விலை விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் விவசாயிகளுக்கு முதல்கூட கிடைக்காமல் இழப்பைச் சந்தித்தனர். தற்போது, ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 35 முதல் அதிகப்பட்சமாக ரூ. 40 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com