தூதூர்மட்டத்தில் தெரு நாய்களால் அவதி!

மஞ்சூர் அருகிலுள்ள தூதூர்மட்டத்தில் தெருநாய்களின் தொல்லையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மஞ்சூர் அருகிலுள்ள தூதூர்மட்டத்தில் தெருநாய்களின் தொல்லையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே தூதூர்மட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதையொட்டி சட்டன், கிரேக்மோர், கெரடாலீஸ், மகாலிங்கம் காலனி, கொலக்கம்பை, உட்லண்ட்ஸ், முசாபுரி, பழனியப்பா எஸ்டேட், சுல்தானா எஸ்டேட், தைமலை, கோட்டக்கல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தூதூர்மட்டத்திற்கு பேருந்து வசதி, அடிப்படைத் தேவைகளுக்காக வர வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். 
இப்பகுதி வழியே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலைக்குச் செல்வோரும் அதிக அளவில் செல்கின்றனர். அவர்கள் தெருநாய்களின் தொல்லையால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தவிர, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் இங்குள்ள தெரு நாய்கள் துரத்துகின்றன. 
பஜார் பகுதியிலுள்ள குப்பைகளை ருசிக்கும் தெரு நாய்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகையில், அவ்வழியே செல்லும் மக்களையும் கடித்து விடுகின்றன. 
இப்பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com