தேவர்சோலையில் முழு அடைப்பு, உண்ணாவிரதம்

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலையில் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலையில் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நீலகிரி மாவட்டம், தேவர்சோலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து யானைகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வுட்பிரையர் பகுதியில் வடமாநிலத் தொழிலாளியை புலி இழுத்துச் சாப்பிட்ட சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது.
 இதேபோல, தேவர்சோலை மேஃபீல்டு தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளர்களைக் கரடி தாக்கும் சம்பவமும் நடைபெறுகிறது. வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி வனத் துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. 
எனவே, தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 
மேலும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com