பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இரு தேச கலாசாரம் குறித்த கருத்தரங்கு

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்ச் துறை சார்பில்  "கலாசார வேறுபாடுகள் - பிரான்ஸ் மற்றும் இந்தியா' என்ற தலைப்பிலான  கருத்தரங்கு  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.  

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்ச் துறை சார்பில்  "கலாசார வேறுபாடுகள் - பிரான்ஸ் மற்றும் இந்தியா' என்ற தலைப்பிலான  கருத்தரங்கு  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.  
இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  கிளமென்ட் டெபியர் பங்குபெற்றார். பிரெஞ்ச் மொழியில் இறைவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கியது. பிரெஞ்ச்   துணைப் பேராசியரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான சிந்தியா ஜார்ஜ் வரவேற்றார்.  சகோதரி செல்வி வாழ்த்துரை வழங்கினார்.  
இந்த நிகழ்சியில்  கிளமென்ட் டெபியர்  பேசுகையில்,  இந்தியா, பிரான்ஸுக்கு இடையே உள்ள கலாசார வேறுபாடுகளை விவரித்தார். கோயிலுக்குச் செல்லும் முன் காலணிகளைத் தவிர்த்தல், மது அருந்துதலை இழிவாகக் கருதுதல், வேற்றுமையிலும் ஒற்றுமை, மகளிரின் நிலை ஆகிய இந்திய அம்சங்களை அவர் எடுத்துக்காட்டினார். 
பிரான்ஸ் நாட்டுக்கு முதன்முறையாக வரும் இந்தியர்களும் அவர்களின் கலாசாரத்தைக் கண்டு வியப்பார்கள் என்றார்.  எடுத்துக்காட்டாக சந்தித்தவுடன் கட்டியணைத்தல், அனைத்து நேரங்களில் அலுவலக உடையில் இருப்பது ஆகிய பிரான்ஸ் அம்சங்களை அவர் சுட்டிக்காட்டினார்.  
இந்திய நாடு முழுவதும் விருந்தினரை வரவேற்கும் தன்மையும் ஒற்றுமை உணர்வும் சிறப்பாக உள்ளது என்று அவர் பாராட்டினார்.  ஹிந்தி பேராசிரியர் ரேகா நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com