வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் கட்டணம் உயர்வு

நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் இதுவரையிலும் யானை சவாரிக்கு  ஒரு  யானைக்கு ரூ. 1,120 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்  பயணிகளுக்கு  ரூ. 11,600  வசூலிக்கப்படுகிறது. மேலும், ஸ்டில்  கேமரா கட்டணம் ரூ. 500 ஆகவும் (பழைய கட்டணம்: ரூ. 50),  விடியோ கேமரா கட்டணம்  ரூ. 3,000 ஆகவும்  (பழைய கட்டணம்: ரூ. 300),  நுழைவுக் கட்டணம்  ரூ. 1,000 ஆகவும்  (பழைய கட்டணம்: ரூ. 100),  வாகன நுழைவுக் கட்டணம்  ரூ. 200 ஆகவும்   (பழைய கட்டணம்: ரூ. 20) உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்வராஜ் மஸ்தா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம்  ரூ. 340லிருந்து  ரூ. 2,500 ஆகவும்,  ஜிப்ஸி வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 4,200 எனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்  சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிருப்தி  அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com