சிறு தேயிலை விவசாயிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு 

சிறு தேயிலை விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்

சிறு தேயிலை விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் தாய்சோலை, சாம்ராஜ், மஞ்சூர், கோரகுந்தா பகுதிகளில் பெரிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன.  8 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். பெரிய தேயிலை எஸ்டேட்களுக்கு 1200 ஹெக்டரும், சிறு தேயிலை விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் 1800 ஹெக்டேர் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. இதிலும் சிறுதேயிலை விவசாயிகள் குந்தா தேயிலை வாரியம் சார்பில் பல்வேறு மானியங்களைப் பெற்று வருகின்றனர். இதன்படி வரும் நாள்களில் சிறுதேயிலை விவசாயிகள், தேயிலை வாரியத்திடம் இருந்து பெரும் மானிங்களைப் பெறுவதற்கு தேயிலை வாரியத்தின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து குந்தா தேயிலை வாரிய மண்டல இணை இயக்குநர் ரமேஷ் கூறியதாவது: சிறு விவசாயிகளின் நலன் கருதி  தேயிலை வாரியம்அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அடையாள அட்டையானது தேயிலை வாரியத்திலிருந்து மானியம் பெறுவதற்கும், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகம் செய்வதற்காகவும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, குந்தா வட்டத்தில் உள்ள அனைத்து  சிறு தேயிலை விவசாயிகளும் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com