மஞ்சூர் பஜாரில் அனுமதியின்றி சாலையோரக் கடைகள் அமைக்க எதிர்ப்பு

மஞ்சூர் பஜாரில் அனுமதியின்றி கடைகள் அமைப்பவர்களுக்கு உரிமம் பெற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மஞ்சூர் பஜாரில் அனுமதியின்றி கடைகள் அமைப்பவர்களுக்கு உரிமம் பெற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
மஞ்சூர் பஜார் பகுதியை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகம், வங்கி, பள்ளி, கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகம் என பல்வேறு முக்கிய தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும்,  குந்தா வட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் கிண்ணக்கொரை, இரியசீகை, கெத்தை, தனிகண்டி, தாய்சோலை, ஜேஜே நகர், அப்பர்பவானி, கீழ்குந்தா, பிக்கட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இதில், பெரும்பாலும் சிறு குறு தேயிலைத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகங்களும் உள்ளன. இவர்களுக்கு வாரந்தோறும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில்தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து
மஞ்சூர் பஜார் பகுதியிலுள்ள காய்கறி, கறிக்கடை, ஹோட்டல்கள், துணிக் கடைகள் அதிக அளவில் பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் கோவை, மேட்டுப்பாளையம், காரமடை, ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் சாலை ஓரங்களில் பேரூராட்சி நிர்வாகத்திடம்எந்த அனுமதியும் பெறாமல் கடைகளை வைத்துள்ளனர். இவர்கள் மஞ்சூர் பஜார் பகுதியில் உரிமம் பெற்று கடை வைத்திருப்பவர்களை விடக்
குறைந்த விலைக்குப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பஜார் பகுதியில் தொடர்ந்து கடை வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. 
எனவே, மஞ்சூர் பஜார் பகுதியில் சாலை ஓரத்தில் அனுமதியின்றி கடை நடத்துபவர்களுக்கு, அனுமதி பெற்ற கடை உரிமையாளர்கள் கண்டம் தெரிவித்ததோடு அவர்களை காலி செய்யும்படி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  
இதுகுறித்து கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம், பஜார் பகுதியில் அனுமதியின்றி கடை அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு பஜார் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com