உணவுப் பொருள்களை  விற்பனை செய்ய 31-க்குள்  உரிமம் பெறுவது கட்டாயம்

கோத்தகிரியில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய ஜனவரி 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறுவது கட்டாயம் என உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாநிதி  தெரிவித்துள்ளார்.    

கோத்தகிரியில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய ஜனவரி 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறுவது கட்டாயம் என உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாநிதி  தெரிவித்துள்ளார்.    
இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் உணவகம், பெட்டிக் கடை, மளிகைக் கடை உள்பட வணிகர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். உணவுப் பொருள்களை விற்பனை செய்ய ஜனவரி 31-ஆம் தேதிக்குள் உரிமத்தைப் பெற வேண்டியது கட்டாயம். 
உரிமம் இன்றி உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்களைத் தயாரிக்க சுத்தமான நீரைப் பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருள்களின் வர்ணத்தைக் கூட்ட ரசாயன பொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருள்களை செய்தித் தாளில் சுற்றி கொடுக்கக் கூடாது. 
மேலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்  என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com