கூடலூரில் மாவட்ட வன அலுவலகம் முற்றுகை
By DIN | Published on : 13th January 2018 09:30 AM | அ+அ அ- |
கூடலூரில் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை அரசியில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
கூடலூரிலிருந்து ஓவேலி பேரூராட்சியில் உள்ள கிராமங்களுக்கு கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதை வனத் துறையினர் ஓவேலி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்துவதைக் கண்டித்து பா.ஜ.க. நிர்வாகி பாஸ்கரன், காங்கிரஸ் நிர்வாகிகள் சளிவயல் ஷாஜி, சுல்பிகர் அலி, சி.பி.எம். தாலூகா செயலாளர் குஞ்சு முகமது உள்ளிட்டோர் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் சமாதானத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து, பொதுமக்களின் வருகை அதிகமானவுடன் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.