குஞ்சப்பணை ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பணை ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பணை ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 கோத்தகிரி அருகே குஞ்சப்பணை ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிவாசி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை அடுத்துள்ள மந்தரை, துதியரை கிராமங்களிலும் 62 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம நுழைவு வாயிலில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியும், நாவா தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையும் அமைந்துள்ளன.
 இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.  இதனால், சாலையை சீரமைக்க ஆதிவாசி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியில் 
இருந்து ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், இப்பகுதி  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com