கூடலூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அதிமுக ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இவ்விழாவில் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். ஒன்றியச் செயலாளர் பத்மநாபன், தலைமை நிலையப் பேச்சாளர் கூடலூரர் ராமமூர்த்தி, ஆவின் தலைவர் மில்லர், சங்கர்ராஜ், தாமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.