முஸ்லிம்களின் தனிச் சட்டத்தில் மத்திய அரசு தலையீடு:இஸ்லாமியர் கூட்டமைப்பு கண்டனம்

முத்தலாக் உள்ளிட்ட முஸ்லிம்களின் பல்வேறு தனிச் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  

முத்தலாக் உள்ளிட்ட முஸ்லிம்களின் பல்வேறு தனிச் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
இதில், மத்திய அரசு அண்மைக்காலமாக முத்தலாக் உள்ளிட்ட முஸ்லிம்களின் பல்வேறு தனிச் சட்டத்தில் தலையிட்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளைப்  புண்படுத்தி வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது.
குன்னூர் வி.பி. தெருவில் நடைபெற்ற இந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஐக்கிய ஜமாத்,  கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இஸலாமிய அமைப்புகள் கலந்துகொண்டன. சிறப்பு அழைப்பாளராக  உயர் நீதிமன்ற  வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.பத்ரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com