குன்னூரில் முப்படை ராணுவ வீரர்களுக்கு இடையே நெடுந்தூர ஓட்டப் பந்தயம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில்  முப்படை  ராணுவ வீரர்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயம்  எம்ஆர்சி தங்கராஜ் ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை  நடைப்பெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில்  முப்படை  ராணுவ வீரர்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயம்  எம்ஆர்சி தங்கராஜ் ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை  நடைப்பெற்றது.
குன்னூர் எம்.ஆர்.சி  ராணுவ மையம் சார்பில் கடற்படை, காலாட்படை, விமானப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கான 49ஆவது10  கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. 
இதில், 24  வீரர்கள் கலந்து கொண்டனர். நெடுந்தூர  ஓட்டப் பந்தயம் தங்கராஜ் ஸ்டேடியத்தில் தொடங்கி சிங்காரத் தோப்பு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது. இதில், சிவப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் குமார் யாதவ் 31 நிமிடம் 44 விநாடிகளில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். சிவப்புப் படையைச் சேர்ந்த  ஹவில்தார் அனிஷ் தாபா 31 நிமிடம் 47 விநாடிகளில் கடந்து இரண்டாமிடம் பெற்றார். நாயக் தீர்த்த குமார் 31  நிமிடம் 53 விநாடிகளில் கடந்து மூன்றாமிடம் பெற்றார்.
முப்படை  வீரர்களுக்கான 2018 -2019 ஆண்டுக்கான ஒட்டு மொத்த போட்டிக்கான கோப்பையை ராணுவ சிவப்பு அணி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான் பரிசுகளைப் வழங்கிப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com