மழை வெள்ளத்தால் உருக்குலைந்த சாலையை செப்பனிடக் கோரிக்கை

கோத்தகிரி அருகே நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கலோடை கிராமத்து சாலை  அண்மையில் பெய்த மழையால்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்து காணப்படுகிறது.

கோத்தகிரி அருகே நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கலோடை கிராமத்து சாலை  அண்மையில் பெய்த மழையால்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்து காணப்படுகிறது.
நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கலோடை கிராமத்துக்குச் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு, அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்பகுதியில்   சிறுத்தை, கரடி, காட்டெருமைகள்  நடமாட்டம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் இந்த சாலை வழியாக விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் சென்று திரும்பும் மாணவர்கள் மாலை  நேரத்தில் இவ்வழியாக அச்சத்துடன் வீடு திரும்பவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பொது  மக்களின் நலன் கருதி  உருக்குலைந்து கிடக்கும் இந்தச் சாலையை உடனடியாகச் செப்பனிட வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com