குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில்  தடுப்புச் சுவர்கள் அமைக்க வலியுறுத்தல்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பல இடங்களில் தடுப்புச்  சுவர்களை அமைக்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பல இடங்களில் தடுப்புச்  சுவர்களை அமைக்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு பகுதிகளில் சாலை விரிவாக்கமும், பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் காட்டேரி முதல் பர்லியாறு வரையிலான சாலையோரங்களில் தடுப்புகள் உடைந்துள்ன. குன்னூர் - உதகை சாலையில் பெரும்பாலான இடங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டப்படாமல் உள்ளன. மிகவும் குறுகலாக உள்ள சாலையில் தடுப்புகள் உடைந்துள்ளன. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. இங்கு வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா வாகனங்களின் ஓட்டுநர்கள் மலைப் பகுதிகளில் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர். 
லாஸ் பால்ஸ், மரப்பாலம், கே.எம்.எஸ்., கே.என்.ஆர். பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள தடுப்புகள் உடைந்துள்ளன. இப்பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து சாலைத் தடுப்புச் சுவர்களை அமைக்க  வேண்டும்  என்று தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com