தொடர்ந்து பெய்யும் மழை:  அழுகும் நிலையில் மலைக் காய்கறிகள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைக் காய்கறிகள் அழுகும் நிலையில் காணப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைக் காய்கறிகள் அழுகும் நிலையில் காணப்படுகின்றன.
  நீலகிரி மாவட்டத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. 
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மலைக் காய்கறித் தோட்டங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கேரட், பீட்ரூட் போன்ற பயிர்களும், மண்ணுக்கு மேல் விளையும் முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களும் அழுகக் கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. 
கேத்தி, பாலாடா,  கொல்லிமலை, கோத்தகிரி  உள்ளிட்ட பகுதிகளில் கேரட், பீட்ரூட்,  முட்டைகோஸ் போன்ற பயிர்களைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  
சில விவசாயிகள் அவசரகதியில் மலைக் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com