ஜெயலலிதா பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி:  டைனமோஸ் அணி சாம்பியன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில்  ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கிரிகெட் போட்டியில்  டைனமோஸ் அணி முதலிடம் பெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில்  ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கிரிகெட் போட்டியில்  டைனமோஸ் அணி முதலிடம் பெற்றது.
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் கடந்த சில வாரங்களாக 20 ஓவர்  கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், கோத்தகிரி மற்றும் சுற்றுட்டார கிராமங்களைச் சேர்ந்த 64 அணிகள் கலந்து கொண்டு 
நாக் அவுட் முறையில் விளையாடின. 
இறுதிப் போட்டியில் கோத்தகிரி டைனமோஸ் அணியும், மிஷன் காம்பவுண்ட் அணியும் மோதின. முதலில் ஆடிய டைனமோஸ் அணி 
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மிஷன் காம்பவலுண்ட் அணி 84 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
சாம்பியன் பட்டம் வென்ற டைனமோஸ் அணிக்கு  மாநிலங்களவை  உறுப்பினர் கே.ஆர். அர்ஜுணன்,  குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர்  சாந்தி ராமு ஆகியோர் பரிசுக் கோப்பையை வழங்கினார்கள்.
கீழ்கோத்தகிரி ஒன்றிய அதிமுக செயலாளர் ஸ்டீபன், , கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com