நீலகிரி மாவட்டத்தில் விதி மீறிய கட்டுமானப் பணிகளைக் கண்டறிய ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான விதிமீறலுக்கான காரணங்களைக் கண்டறிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகக் குழுவுடன் இணைந்து மாவட்ட 

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான விதிமீறலுக்கான காரணங்களைக் கண்டறிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகக் குழுவுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
நீலகிரியின் சுற்றுச்சூழல், இயற்கைச் சூழலைக் காக்க 1993-ஆம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், குடியிருப்புகளுக்கான கட்டட அனுமதி உள்ளாட்சி அமைப்புகளிடமும்  வணிக ரீதியான கட்டட அனுமதி மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான கட்டட அனுமதிக் குழுவிடமும் பெற உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சட்டத்தை மீறி பலரும் கட்டடங்களைக் கட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  உள்ளாட்சி இயக்குநரகத்தின்அறிவுறுத்தலின்பேரில்  கட்டட விதிமீறல் மற்றும் காரணம் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகக் குழுவுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com