உதகை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் தொடக்கம்

உதகையில் உள்ள மாரியம்மன் கோயில் ஆண்டு தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியுள்ளன.

உதகையில் உள்ள மாரியம்மன் கோயில் ஆண்டு தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியுள்ளன.
உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன்  கோயில் ஆண்டு தேர்த் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நவ கலச பூஜை நடத்தப்பட்டது.
பின்னர், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.  அதையடுத்து, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கின.  இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்ட ஒக்கலிக இனத்தாரின் சார்பில் புலி வாகனத்தில் ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.  
ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வரை தொடர்ந்து  பல்வேறு உபயதாரர்களின் சார்பில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஏப்ரல் 17ஆம்தேதி திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதையடுத்து 20ஆம் தேதி நடைபெற உள்ள விடையாற்றி உற்சவத்துடன் ஆண்டு தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com