மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 
 நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும்,  சிற்றோடைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
  மாவட்டத்தில் அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி, கெத்தை, போர்த்தி மந்து, பைக்கார உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அணைகளும், பல்வேறு சிறிய அளவிலான அணைகளும் உள்ளன.  அணைகளில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் மூலம் குந்தா, கெத்தை, பரளி, காட்டுக்குப்பை, சிங்காரா, பைக்கார உள்ளிட்ட 12 நீர்மின் நிலையங்கள் இயக்கப்பட்டு அதன்மூலம் 833.65 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  
மின் உற்பத்திக்குப் பின்னர் நீர்மின் நிலையங்களில் இருந்து வெளியேரும் தண்ணீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பவானிப் பாசனப் படுக்கை விவசாயத்திற்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது.
கடந்த 4 மாதமாக மழை பொழியாததால் அணைகளின் நீர்மட்டம் பெருமளவு குறைந்துவிட்டது. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விவசாயத்துக்கும் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 
இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள அணைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில்,  குந்தா கெத்தை உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com