குன்னூரில் பள்ளிவாசல் பாதையை ஆக்கிரமித்துள்ள  மதுக்கடையை அகற்றக் கோரி தமுமுக ஆர்ப்பாட்டம்

குன்னூரில் பள்ளிவாசல் பாதையை ஆக்கிரமித்துள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குன்னூரில் பள்ளிவாசல் பாதையை ஆக்கிரமித்துள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூர் மவுண்ட் ரோடு, சின்ன பள்ளிவாசல் செல்லும் பாதையை ஆக்கிரமித்து மதுக்கடை அமைந்துள்ளது. இந்தக் கடையை அகற்றக் கோரி தமுமுக சார்பில், வி.பி.தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில்  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிவாசலுக்குச் செல்லும் பாதையில் இந்த மதுக்கடை அமைந்திருப்பதால் இங்கு மது அருந்த வருவோரால் இப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பள்ளிவாசல் அருகில் பொது மக்கள் பயன்படுத்தி வரும் ஒருவழிப் பாதையில் நின்று கொண்டு, மது அருந்துவோர் பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதனால் இந்தப் பாதையையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, இந்த மதுக்கடையை விரைவில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com