பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

கோத்தகிரி, ராம்சந்த் வியாபாரிகள் சங்கம், சிட்டிசன் போரம் அமைப்பு ஆகியன இணைந்து சனிக்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தின. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார்


கோத்தகிரி, ராம்சந்த் வியாபாரிகள் சங்கம், சிட்டிசன் போரம் அமைப்பு ஆகியன இணைந்து சனிக்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தின.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார்.
சிட்டிசன் போரம் அமைப்பைச் சேர்ந்த சங்கீதா, ராதா, ரீட்டா ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எந்தக் கடையிலும் விற்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒவ்வொரு கடையிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பதில்லை என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com