குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

குன்னூர், கோத்தகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

குன்னூர், கோத்தகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
குன்னூர், கோத்தகிரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13ஆம் தேதி பல்வேறு பகுதிகளிலும் ஹிந்து அமைப்புக்கள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 
15ஆம் தேதி முதல் விநாயகர் சிலைகள் விசர்ஜன செய்யப்பட்டு வருகின்றன. இதில்,  ஹிந்து அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது. இதையொட்டி,  காவல் துறை துணைக்  கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி  தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 
  முன்னதாக,  குன்னூர்  சிம்ஸ் பூங்கா பகுதியில் இருந்து விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டது.  மவுண்ட் ரோடு வழியாக விநாயகர் சிலைகள் கொண்டுசெல்லப்பட்டு லால்ஸ் அருவியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. கோத்தகிரியில் டானிங்டனில் இருந்து விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டது.  சந்தைப் பகுதி வழியாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு உயிலட்டி அருவியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. மொத்தம் 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கூடலூரில்...  கூடலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வெகுவிமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
      இந்து முன்னணி சார்பில் கூடலூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கூடலூர் நகருக்குக் கொண்டு வரப்பட்டு ராஜகோபாலபுரம் ஓம் சக்தி கோயில் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்லம் புறப்பட்டது. முக்கிய சாலைகள் வழியாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு இரும்புப் பாலம் கொண்டு கொண்டு செல்லப்பட்டு அங்கு விசர்ஜனம் செய்யப்பட்டது.
   விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள முக்கூடல் லிங்கேஸ்வரர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.  இங்கிருந்து விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ,வட்டாட்சியர் அலுவலகம் வழியாகச் சென்ற ஊர்வலம் மீண்டும் பழைய பேருந்து நிலையம் வந்து கோழிக்கோடு சாலை வழியாக இரும்பு பாலம் சென்றடைந்தது. 
இங்கு பாண்டியார்- புன்னம்புழா ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com