மேராக்காய் விலை குறைவு: விவசாயிகள் கவலை

மேராக்காய்க்கு விலை குறைவு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மேராக்காய்க்கு விலை குறைவு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
 நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. 
மஞ்சூர், குன்னூர், உதகை,  கூடலூர், கோத்தகிரி, உள்ளிட்ட பகுதிகளில் கேரட்,  பீட்ரூட், முட்டைகோஸ்,  காளிபிளவர், உருளைக்கிழங்கு, மேராக்காய், பட்டாணி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
இவை மேட்டுப்பாளையம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்த காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். 
இதில் குறைந்த செலவில் கூடுதல் வருமானம் தரும் மேராக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகினறனர்.  இந்நிலையில்,  தற்போது சாதா ரக மேராக்காய் கிலோ ரூ. 4 முதல் ரூ. 6 வரையும்,  உயர் ரகம் கிலோ ரூ. 8 முதல் ரூ.13 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. குறைவான விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com